மதுரை: மதுரை மாவட்டம், ஊமச்சிகுளம் உட்கோட்டம், ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில், இன்று மதுரை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில், ஊமச்சிகுளம் காவல் நிலைய சரகம் ஆலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை (வயது 55). த/பெ. கம்பலத்தான் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஆலாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகளான 1) அதியபிரபு, த/பெ. ஆண்டிச்சாமி, 2) அருண்குமார், த/பெ. சக்திவேல் மற்றும் 3) ஆண்டிச்சாமி, த/பெ. விஸ்வநாதன், ஆகிய மூவர் மீது ஊமச்சிகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, காவல் துறையினரால் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட காவல்துறை, கொலை உள்ளிட்ட கொடுங்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தந்து தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகின்றது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















