மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம் விக்கிரமங்கலம் காவல் நிலைய கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான, 1) சத்தியராஜ் (27). த/பெ. ஆதியராஜா, நேதாஜி நகர், பழங்காநத்தம், மதுரை, 2) தருண்குமார் (24). த/பெ. சின்னா, கீழகண்டனி, சிவகங்கை மாவட்டம், 3) கருப்பசாமி (24). த/பெ. முருகன், தற்போது சுந்தரராஜபுரம், மதுரை, மற்றும் 4) ராஜ்குமார் (20). த/பெ. கலையரசன், ஜெய்ஹிந்துபுரம், மதுரை ஆகியோர் தொடர்ந்து கொடுங்குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களின் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில், மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள், மேற்கண்ட நான்கு பேரையும் தமிழ்நாடு குண்டர் தடுப்புச் சட்டம், 1982-ன் கீழ் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்படி, இன்று (30.07.2026) நான்கு பேருக்கும் குண்டர் தடுப்புக் காவல் ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்ட காவல்துறை, கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல், ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல், வழிப்பறி, போதைப்பொருள் குற்றங்கள், பொதுமக்களின் உயிர், உடைமை மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் போன்ற கொடுங்குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















