திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், ரகுராமன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, தண்டையார் குளத்தில் மர்ம நபர்கள் சிலர் சட்ட விரோதமாக மண் அள்ளி கொண்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து காவல் ஆய்வாளர், ராஜாராம் வழக்கு பதிவு செய்து சிவா (35). லென்சன் (20). அந்தோணி அஜித் (28). சங்கர்(25). ராஜா (35). சுடலையாண்டி (39). ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 23½ யூனிட் குளத்து மண் மற்றும் 8 வாகனங்களையும் பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















