திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம், கோவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் இசக்கிபாண்டி (26). மற்றும் பாண்டி மகன் முப்பிடாதி (30). ஆகிய இருவரும் போக்சோ வழக்கு குற்றவாளிகள். இவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம் (Act 14/1982) கீழ் நடவடிக்கை எடுக்க நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சுதா அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி, நந்தன்தட்டை பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் பாலகிருஷ்ணன் (50). என்பவர் மீது நடவடிக்கை எடுக்க பாப்பாக்குடி காவல் நிலைய ஆய்வாளர், பரத்லிங்கம் விடுத்த வேண்டுகோள் படி
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ கா.ப., பரிந்துரைப்படிமாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் (12.05.2026) அன்று மூவரும் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல்துறையினரால் நிகழாண்டில் மட்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 50 நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















