திருநெல்வேலி: திருநெல்வேலி காவல் சரகத்திற்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்று வரும் ஆடித்தபசு திருவிழாவின் இரண்டாவது நாளில், காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, திருவிழா பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்காக நடைபெற்ற இரவு உணவு நேரத்தில் தான் ஒரு உயர் காவல் அதிகாரி என்று நினைக்காமல் அவர்களுடன் இணைந்து ஒரே வரிசையில் அமர்ந்து உணவருந்தினார். இதன் மூலம் அனைவருக்கும் ஒரே உணவு என்ற பண்பை வெளிப்படுத்திய இந்நிகழ்வு, காவல்துறையினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு ஒற்றுமை மற்றும் சமத்துவ உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















