மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில், உசிலம்பட்டி கட்டடப் பொறியாளர் சங்கம் மற்றும் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் இணைந்து சைபர் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் செல்போன் மற்றும் சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது, இணைய மோசடிகளில் சிக்காமல் இருப்பது மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட (NSS) மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















