திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், சோபியா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பணகுடி அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்துடன்நின்று கொண்டிருந்த முதலைக்குளம் மகாராஜன் (23). லெவஞ்சிபுரம் கல்யாணராமன் (21). அம்மாச்சி கோவில் ஜனார்த்தனன் (20). மேலப்பாளையம் காளிமுத்து (22). மற்றும் வசவப்புரம் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (18). ஆகியோரை சோதனை செய்து பார்த்தபோது, கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து, பழவூர் காவல் ஆய்வாளர், சுரேஷ்குமார் (பொறுப்பு பணகுடி காவல் நிலையம்) வழக்கு பதிவு செய்து 5 நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.




















