திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர், பல்லிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (22). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவர் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மானூர் காவல் ஆய்வாளர், பாலகிருஷ்ணன் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், ரமேஷ் குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் (25.06.2026) அன்று அடைக்கப்பட்டார்.
நிகழாண்டில் இதுவரை 62 பேர் குண்டர் சட்டத்தில் மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















