திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, சடையபுரம் பகுதியை சேர்ந்த தீபக்பாய் மனைவி பவர் சங்கீதா பெண் (49). கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் முக்கூடல் காவல் ஆய்வாளர், சங்கரநாராயணன் இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விஷ்வேஷ் பா. சாஸ்திரி, இ.கா.ப., பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், பவர் சங்கீதா பென் குண்டர் சட்டத்தில் மதுரை பெண்கள் மத்திய தனிச்சிறையில் (21.06.2026) அன்று அடைக்கப்பட்டார். நிகழாண்டில் இதுவரை 61 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















