திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் காவல் சரகத்திற்குள்பட்ட பொன்னாக்குடி பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், பெனடிக்ட் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தன. அதில், அவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ராமகிருஷ்ணன் (43). என்பதும், விற்பனைக்காக 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. அவரை காவல்துறையினர் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















