திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர், கோமதி சங்கர் தலைமையிலான காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அதில் இருவரும் மேலப்பாளையம் காட்டு செக்கடி தெருவைச் சேர்ந்த முகமது உசைன்(27). வெள்ளை கலிபா தெருவைச் சேர்ந்த சிந்தா மதார்(22). ஆகியோர் என்பதும், விற்பனைக்காக சுமார் 1.3 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இருசக்கர வாகனத்துடன் கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















