திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மரு.V.பிரசண்ணகுமார், இ.கா.ப., தலைமையில் (12.05.26) அன்று மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை, நிலுவையில் உள்ள வழக்குகள், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது, நீதிமன்ற அலுவல்கள், உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட காவல்துறையின் வாகனங்கள், நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறதா என காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டு வாகன ஓட்டுநர்களுக்கு முக்கிய அறிவுரைகள் வழங்கி, வாகனங்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டார். பின்பு மாவட்டத்தில் கொலை, திருட்டு மற்றும் போக்சோ வழக்குகளில் உள்ள சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உட்பட சிறப்பாக பணிபுரிந்த 62 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















