திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் – பொட்டல்புதூர் பிரதான சாலையில் உள்ள அரசன்குளம் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்தின் பேரில் ஒரு டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் துலுக்கர் பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (54) என்பவர், 2 யூனிட் M-SAND – ஐ உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக கடத்தி வந்தது தெரியவந்தது.
இது குறித்து, முக்கூடல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து, அவரிடமிருந்து M-SAND மற்றும் டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















