திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் மோப்ப நாய் படைப்பிரிவில் பணியாற்றி வந்த மோப்பநாய் சீஸர்,(caesar) பல்வேறு குற்றவியல் விசாரணை, தடயங்களை கண்டறிதல், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை கண்டறிதல் உள்ளிட்ட முக்கிய காவல் பணிகளில் திறம்பட செயல்பட்டு காவல்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தது. திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சீஸர் உயிரிழந்தது. இது காவல்துறையினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீஸரின் சேவையைப் போற்றும் வகையில், காவல்துறை மரபின்படி 24 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி அஞ்சலி நிகழ்வில், துணைக் காவல் கண்காணிப்பாளர், சந்திரன், (மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு) மோப்ப நாய் படைப்பிரிவு காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் மலர்வளையம் வைத்து அதன் சேவையை நினைவு கூர்ந்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















