தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக அமைச்சுப் பணி நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த திரு. ராமசுப்பிரமணிய பெருமாள் அவர்கள் கோயம்புத்தூர் சரக காவல் அலுவலகத்திற்கு முதுநிலை நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு பெற்று நாளை பணி மாறுதல் செல்வதை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் (13.11.2025) அவருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம், திரு. தீபு, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் உட்பட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணி கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.




















