
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சியில் செங்கல்பட்டு – அரக்கோணம் ரயில்வே தடத்தில் ஆத்தூர் கிராமத்தில் இருந்து வடபாதி செல்லும் பகுதியில் இரயில்வே கேட் உள்ளது. இந்த இரயில்வே கேட்டினை கடந்து வடபாதி,அம்பேத்கர் நகர், உள்ளிட்ட பகுதியில் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்படுகிறது. இந்நிலையில், தெற்கு இரயில்வே சார்பில் இந்த ரயில்வே கேட் உள்ள இடத்தில் புதிதாக சுரங்கப்பாதை அமைக்கப் படுவதால் ரயில்வே கேட் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதுவரை கிராம மக்கள் அருகில் உள்ள மற்றொரு சுரங்கப்பாதையை பயன்படுத்தும் படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இரயில்வே கேட் அருகில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் நூற்றுக்கு மேற்பட்டோர் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்


















