திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கணேசன் மூர்த்தி தலைமையில், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கோபால் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடமதுரை சாலை தட்டாரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கையில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்டிருந்த ஒத்தையூரைச் சேர்ந்த அம்மையப்பன் (38). என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து பட்டாக்கத்தி பறிமுதல் செய்யப்பட்டு, இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து வேடசந்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















