திருநெல்வேலி: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வியல் வழிமுறைகளாக கடைபிடிப்பேன்.
சுயமரியாதை ஆளுமை திறனும் பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை ஒப்படைத்துக் கொள்வேன். மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி ஏற்கிறேன், என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா இ.கா.ப., தலைமையில், காவல் துணை ஆணையர்கள், V.கீதா (மேற்கு) G.S.அனிதா, (தலைமையிடம்) S.விஜயகுமார், (கிழக்கு) காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் (இன்று) 16-09-2024 ஆம் தேதி, சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்