திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், தற்போது Whatsapp செயலி வாயிலாக அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) குழுக்களில் உள்ள நபர்களின் எண்கள் மூலமாகவோ RTO Challan App-ஐ (Apk file) மூலம் உங்கள் வாகனத்திற்கு அபராததொகை உடனே செலுத்த வேண்டும் என குறுந்தகவல் வரும், அதை புதுப்பிப்பு செய்யவில்லை என்றால் உங்களது வாகனத்தின் பதிவுச் சான்று முடக்கப்பட்டுவிடும் என செய்தி இருக்கும். அதை உண்மையென நம்பி click செய்துவிட்டால் உங்கள் Whatsapp கணக்கு உடனே hack செய்யப்பட்டு உங்களது வங்கி கணக்கிலிருந்து பணம் மோசடியாக எடுக்கப்பட்டுவிடும்.
மேலும், இந்த Apk file தகவல் தானாகவே உங்கள் whatsapp குழுக்களில் உள்ள அனைத்து நபர்களுக்கும் உங்கள் மொபைல் எண்ணில் இருந்தே அனுப்பிவிடும். இதே போன்று அறிமுகமில்லாத எண்ணிலோ (அ) உங்கள் குழுக்களில் உள்ள தெரிந்த நபர்களின் எண்ணிலோ RTO Challan App – அபராத தொகை மற்றும் வங்கிகளின் வெகுமதி புள்ளிகள், அரசாங்க நலதிட்ட உதவி, மானியம் என்று வரும் எந்த Apk file -களையும் உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். காவல் துறையினரும் தண்டனைத்தொகை எதையும் Whatsapp செயலி மூலமாக கோர மாட்டார்கள்.
மேலும் காவல் துறையினர் எண்களிலிருந்தோ அல்லது காவல் துறையினர் போலவே போலியான அடையாளத்துடன் உள்ள Whatsapp கணக்குகள் மூலம் வரும் குறுஞ்செய்திகளை எவரும் நம்ப வேண்டாம். இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்றால் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களிலோ அல்லது சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணிற்கு புகாரினை பதிவு செய்யுமாறு திருநெல்வேலி மாவட்ட காவல்ப கண்காணிப்பாளர், மரு.V.பிரசன்ன குமார்,இ.கா.ப., கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















