திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், தேஷ்முக் சேகர் சஞ்சய், இ.கா.ப., உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கண்டறியவும், பொதுமக்களுக்கு தொல்லை மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்யும் செயல்களில் ஈடுபடும் நபர்களை தடுக்கவும் உருவாக்கப்பட்ட ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன் மூலம் 37 சரித்திர பதிவேடு குற்றவாளிகள், மற்றும் 4 பொது தொல்லை ஏற்படுத்திய நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த ஸ்பெஷல் ட்ரைவ் ஆபரேஷன் டீம் மூலம் குற்றவாளிகள் மீதான கைது நடவடிக்கை தொடரும் என மாநகர காவல் துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















