இராமநாதபுரம்: இராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த டிராக்டரை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து மோதியதில் தலைமை காவலர் மகேஷ்குமார் உயிரிழந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மகேஷ்குமார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியின்போது உயிரிழந்த தலைமை காவலர் மகேஷ்குமாரின் மறைவு காவல்துறை வட்டாரத்திலும், பொதுமக்களிடையிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















