கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்கள் தலைமையில், வாராந்திர பொதுமக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் (29.07.2026) மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் அளித்த மனுக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் பெற்றுக்கொண்டு, மனுதாரர்களின் குறைகளை பொறுமையாகக் கேட்டறிந்தார். தொடர்ந்து, ஒவ்வொரு மனுவின் தன்மையையும் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அலுவலர்கள் மற்றும் பிரிவு அதிகாரிகளுக்கு, உரிய சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, மனுக்களை காலதாமதமின்றி விசாரணை செய்து, தகுந்த தீர்வு வழங்குமாறு அறிவுறுத்தினார்.



















