திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மேல முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் தருவை பகுதியில் நூற்றுக்கணக்கான வாத்துகளை வளர்த்து வருகிறார். வாத்து பராமரிப்பை பாலசமுத்திரத்தைச் சேர்ந்த முப்பிடாதி என்பவர் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் தருவை, சாஸ்தா கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் மகாராஜன் என்ற மாயா(24). உள்பட சிலர் முப்பிடாதியிடம் சமைத்து சாப்பிட வாத்துகளை இலவசமாக கொடுக்கும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டனர் .
பின்னர், நள்ளிரவு அப்பகுதிக்கு வந்த மாயா உள்ளிட்ட நபர்கள் சுமார் 100 வாத்துக்களை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு, அங்கிருந்த வலைகளை சேதப்படுத்தி விட்டு தடுக்கச் சென்ற முப்பிடாதியையும் அறிவாளால் தாக்கியுள்ளனர். இது குறித்து முன்னீர்பள்ளம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து மகாராஜன் என்ற மாயா, வீரபுத்திரன் மகன் ராஜேஷ்(23). ஆகிய இருவரையும் (26.05.26) அன்று கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















