மதுரை: தமிழக காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் “தமிழ்நாட்டின் பெருவிழா – தேர்தல் திருவிழா” வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றது. அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள வாக்கு எண்ணும் பணிகளை முன்னிட்டு, வாக்குப்பெட்டிகள் பாதுகாக்கப்படும் மையங்களான மதுரை கல்லூரி மற்றும் தியாகராஜர் கல்லூரிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. அபிஷேக் தீக்சித், இ.கா.ப., அவர்கள் களஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை விரிவாக பரிசோதிக்கப்பட்டு, தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.




















