தேனி: தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த மணிக்குமார் (39). என்பவர், குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி சந்திரகலா (37). மற்றும் மகள் சஞ்சனாஸ்ரீ (13). ஆகியோரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு திருப்பூரில் இருந்து தேவாரம் நோக்கி சந்திரகலா தனது மகளுடன் பேருந்தில் பயணம் செய்தபோது, வத்தலகுண்டு காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்றது. அப்போது மறைந்திருந்த மணிக்குமார் பேருந்தில் ஏறி, அரிவாளால் இருவரையும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த தாய், மகள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக வத்தலகுண்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முனியாண்டி தலைமையிலான போலீசார் மணிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















