கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்ததில் அப்பேருந்தில் பயணம் செய்த ஒரு நபரிடம் சுமார் 150 கிராம் போதை பொருள்கள் இருந்தது. சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் கடத்திய எதிரியை கைது செய்து அவரிடமிருந்து ₹3,00,000 /- ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.




















