கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலத்தோட்டனப்பள்ளி பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் அம்ரிஷ் என்பவரிடம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட எதிரி நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கின் குற்றவாளி மேலும் பல குற்றச் செயல்களில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G. S. அனிதா அவர்களின் பரிந்துரையின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், இ.ஆ.ப. அவர்களின் உத்தரவு பெற்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.




















