மதுரை: பொதுமக்களின் புகார் மனுக்களின் மீது சிறப்பு கவனம் செலுத்தி விரைவாகக் தீர்வு காணும் நோக்கில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் /படைத் தலைவர் திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, மதுரை மாநகரில் வாரம்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை நாட்களில் “பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்” நடைபெற்று வருகிறது. அதன்படி, (25.07.2026) இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாநகர காவல் ஆணையர் திரு. S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 21 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் துணை ஆணையர் (வடக்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (தெற்கு) ஆகியோரிடம் அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் மாநகரில் உள்ள அனைத்து காவல் சரகங்களில் உள்ள காவல் உதவி ஆணையர் அலுவலகங்கள் மற்றும் காவல்நிலையங்களிலும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















