திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு கிராமத்தைச் சேர்ந்தவர் பூலுடையார்(35). வழக்கறிஞராக பணியாற்றி வரும் இவருக்கும், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் மகள் ராஜமகாலட்சுமி (30). என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.பாளையங்கோட்டையில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் ராஜ மகாலட்சுமிக்கும் பூலுடையாருக்கும்
கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், கடந்த 1ஆம் தேதி ராஜமகாலட்சுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், பூலுடையார் கடம்போடுவாழ்வு கிராமத்தில் உள்ள தனது வீட்டில் (05.05.26) அன்று இருந்த போது, மாலை 5.30 மணியளவில் அங்கு வந்த 2 போ் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திய காவல்துறையினர் கொலையில் தொடர்புடைய அருணாச்சலராஜா (30). ராம் (29). ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்

















