திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திருநெல்வேலி லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மெக்லரின் எஸ்கால் தலைமையிலான காவல்துறையினர் (18.06.26) அன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பணியாற்றும் அதிகாரிகளிடம் விசாரணை செய்து அவா்கள் வைத்திருந்த பைகள், அலுவலக மேசைகள், அலமாரிகள், பணியாளர்களின் வாகனங்கள் போன்றவற்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். மேலும் இணையவழி பணப் பரிவர்த்தனை குறித்தும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் அலுவலக வளாகத்தில் நின்ற இடைத்தரகர்கள் 8 பேரிடமிருந்து மொத்தம் ரூ.92,000 பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















