தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஊத்துமலை முத்துபாண்டி மகன் பெரியதுரை (21). சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட K.P.அருணாசலபுரம் ராமசாமி மகன் சுரேஷ் (30). மற்றும் செங்கோட்டை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட வல்லம் பாஸ்கர் மகன் பழனிசாமி (32). ஆகியோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அளித்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















