தேனி: தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கே.எஸ். பிரவீன் கௌதம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சார்பில் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பாதுகாப்பு, சட்ட உரிமைகள், சைபர் மோசடி தடுப்பு, பாலியல் தொல்லைகள் மற்றும் அவசரகால உதவி எண்கள் (1091, 100, 181, 1098, 1930) குறித்து மாணவிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.




















