திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் கானப்பாடியை சேர்ந்த வடிவேல்(54). இவரின் மகன், மகள் ஆகிய இருவருக்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரெக்கார்டு கிளர்க் வேலையும், வருமானவரித்துறையில் உதவி கண்காணிப்பாளர் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி திண்டுக்கல் காளிமுத்து பிள்ளை சந்து பகுதியை சேர்ந்த ஞானசேகரன், சந்தோஷ்பாலன், கிரிதரன், கிரிதரனின் தாய் விஜயலட்சுமி, தங்கை திவ்யா ஆகியோர் ரூ.15 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரன், கிரிதரன், விஜயலட்சுமி, திவ்யா ஆகிய 4 பேரை கைது செய்தனர் மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சந்தோஷ் பாலனை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















