திண்டுக்கல்: திண்டுக்கல் எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,மதுவிலக்கு போலீஸ் டிஎஸ்பி வினோதினி,இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரோஜர் மிலிட்டன் மற்றும் போலீசார் சிறுமலை பொன்னுருக்கி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வீரபாண்டி மனைவி ரஞ்சிதம் (வயது 54) என்பவர் வீட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து 6.190 கிலோகிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















