திருவள்ளூர்: கடம்பத்தூர் மேம்பாலத்தில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கடம்பத்தூர் B2 காவல் நிலைய காவலர் திரு. தேவராஜ், விபத்து ஏற்பட்ட இடத்தை உடனடியாக சுத்தம் செய்து, போக்குவரத்தை சீரமைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொண்டார்.




















