திண்டுக்கல்: திண்டுக்கல், விவேகானந்தா நகரில் கடந்த மாதம் 27-ம் தேதி டிட்டோ(48). என்பவரின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து நகை, வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடி தொடர்பாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து நகர் DSP.கார்த்திக் உத்தரவின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள CCTV பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட மதுரையை சேர்ந்த கணேஷ் (எ)ராக்கெட்கணேஷ்(25). திருச்சியை சேர்ந்த மணி(எ) குருவிக்கார மணி(28). ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















