திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதிகளில், நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி மக்கள் பயம் இன்றி வாக்களிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சேகர் தேஷ்முக் சஞ்சய், இ.கா.ப., உத்தரவின் பேரில், மாநகர காவல் துணை ஆணையர்கள், தலைமையில் கொடி அணிவகுப்பு மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருங்குளம் சோதனை சாவடியில் இருந்து குலவணிகர்புரம் சிஎஸ்ஐ சர்ச் வரையும், மற்றொரு பிரிவு அரசு மருத்துவ கல்லூரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணா நகரிலிருந்து காவல் நிலையம் வரையும் நடைபெற்றது. இந்த கொடி அணி வகுப்பில், சரக காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், சட்டம் & ஒழுங்கு காவல் துறையினர், ஆயுதப்படை காவல் துறையினர் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















