கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது பூசாரிப்பட்டி கெட்டுக்கொல்லை ஏரி அருகே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது சட்டவிரோதமாக அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 4 1/2 யூனிட் நொரம்பு மண் இருந்தது. அனுமதியின்றி நொரம்பு மண் கடத்திய ஐந்து குற்றவாளிகளை கைது செய்து நொரம்பு மண் கடத்த பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து ஐந்து குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















