தேனி : தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பி. சினேஹா பிரியா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மகளிர் காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்களுக்கு காலதாமதமின்றி வழக்குப்பதிவு செய்து, உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு காவல் கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கினார். மேலும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதி கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்றும், மகளிர் காவல் நிலையங்களின் சேவை பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.




















