திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காவல் ஆய்வாளர், கண்ணா காந்தி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, திருகுறுங்குடி தனியார் பள்ளி அருகே உள்ள காலி இடத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த, மாவடி, ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்த கபிலன் (22). என்பவரை சோதனை செய்து பார்த்தபோது, 825 கிராம் கஞ்சா, மற்றும் 325 கிராம் போதை சாக்லேட் ஆகியவற்றை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரிடமிருந்த போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















