சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் டாக்டர் A. அமல்ராஜ், இ.கா.ப., அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, போதைப்பொருட்களுக்கு எதிரான இலட்சினையை (Logo) அறிமுகப்படுத்தி, “I Am Against Drugs” கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், சுமார் 6,000 கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்று, போதை இல்லா சமூகத்தை உருவாக்க உறுதியேற்றார். நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள். போதைப்பொருள் விழிப்புணர்வு செல்ஃபி புகைப்படக் கூடம் (Selfie Photo Booth) திறந்து வைக்கப்பட்டது. “I Am Against Drugs” கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. மாணவ, மாணவிகள் “Say No to Drugs” என்ற போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்று, போதை இல்லா சமூகத்தை உருவாக்க உறுதியேற்றனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















