திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், வடக்கன்குளம், பெருங்குடி பகுதியை சேர்ந்த கோபால் மகன் சுந்தர் (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், சாந்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார், இ.கா.ப., பரிந்துரைப்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், சுந்தரை (21.05.2026) அன்று குண்டர் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். திருநெல்வேலி மாவட்டத்தில், நிகழாண்டில் மட்டும் 52 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















