திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (59). மத போதகரான இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றசாட்டு நிரூபணமானதால் நீதிமன்றம் (11.06.2026) அன்று குற்றவாளி செல்வராஜுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000/- அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,M. சண்முகம் (CWC) , வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், வெங்கடேஷ்
காவல் ஆய்வாளர்கள், சாந்தி, C. சாந்தி (தற்போது ஓய்வு) தலைமை பெண் காவலர் மாலதி, ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. V. பிரசண்ண குமார்,இ.கா.ப., வெகுவாக பாராட்டினார். மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், நிகழாண்டில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2 குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தீவிரமான நடவடிக்கைகள் எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















