திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த (13). வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளி கைது செய்யப்பட்டார். வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் (27.04.2026) அன்று ரமேஷிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,000/- அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்கவும் உத்தரவிட்டது. இவ் வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக செயல்பட்ட திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சண்முகம், (CWC) வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், வெங்கடேஷ், மற்றும் காவல் ஆய்வாளர்கள், சாந்தி, அங்கயற்கண்ணி,(தற்போது EOW சென்னை) தலைமை காவலர் செல்வ புனிதா, ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.V. பிரசண்ண குமார்,இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்



















