திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சுப்பிரமணியபேரி விலக்கு அருகே காவல் உதவி ஆய்வாளர், முருகன் தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த, சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த குமாரசாமி (45). என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குமாரசாமியை கைது செய்து
அவரிடமிருந்து 2¼ கிலோ புகையிலை பொருட்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர் .
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















