தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு – பாண்டவர்மங்கலம் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, கோவில்பட்டியைச் சேர்ந்த திருப்பதி (50). என்பவர் சட்டவிரோத விற்பனைக்காக 139 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில், ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் திருப்பதியை கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




















