தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக்குமார், உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர் . அதன் தொடர்ச்சியாக (05.06.2026) அன்று குற்றாலம் வல்லம் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் குற்றாலம் காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு சுப்பையா மகன் முத்துகுமார் (51). என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 154 கிலோ எடை கொண்ட (மதிப்பு ரூ. 1,54,000/-) புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















