திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வாகைகுளம் அருகே காவல் ஆய்வாளர், சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மறுகால்குறிச்சி பகுதியை சேர்ந்த ஐயப்பன் (39). முருகன் (44). நாங்குநேரியை சேர்ந்த இசக்கிதுரை (24).வானுமாமலை (41). தம்புபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை (46). ஆகியோர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்து பார்த்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 49 கிலோ புகையிலை பொருட்களையும் , காரையும் கைப்பற்றி சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















