நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்ததாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கணிசமான அளவு கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.




















