தென்காசி: தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் இன்ஸ்டாகிராமில் அமெரிக்க பங்கு சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என வந்த விளம்பரத்தை நம்பி, அவர்கள் அனுப்பிய செயலியை (App) பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ரூ. 92 லட்சம் முதலீடு செய்துள்ளார். பின்பு அதற்கான லாபத் தொகையை பெறுவதற்கு மேலும் ரூ. 37 லட்சம் கட்ட வேண்டும் என அவர்கள் நிர்பந்தித்ததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், S.அசோக் குமார், உத்தரவுப்படி மாவட்ட சைபர் கிரைம் தீவிர விசாரணை நடத்தி, காவல் ஆய்வாளர், வசந்தி தலைமையிலான காவல்துறையினர் பண மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்கம், தமக்கலியை சேர்ந்த நவாப் அலி கோல்டர் மகன் தாரிகுல் கோல்டர் (26) என்பவரை கைது செய்து, தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு, மேற்கு வங்கம் சென்று குற்றவாளியை கைது செய்த சைபர் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்




















